கோவை இருகூர் பகுதியில் நேற்று (நவ., 06) மாலை காரில் வந்த சிலர் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றனர். அப்பகுதி மக்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பெண் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களில் பெண் அலறும் சத்தமும், கார் வேகமாக செல்வதும் பதிவாகியுள்ளது. சமீபத்தில் கோவையில் மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.