சென்னையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து, இன்று (பிப்., 15) சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்தார். 25 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.