வளர்ப்பு நாய் நக்கியதால் ஏற்பட்ட சிறு கீறல் வழியாக பரவிய 'செப்சில்' தொற்றால், இங்கிலாந்தை சேர்ந்த மஞ்சி சங்கா என்ற பெண் தனது 2 கைகளையும், கால்களையும் இழந்துள்ளார். நாயின் உமிழ்நீரால் ஏற்பட்ட இந்த தொற்று, அவருக்கு பலமுறை மாரடைப்பு மற்றும் உறுப்பு செயலிழப்பை உண்டாக்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 32 வார தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்த அவர், செல்லப்பிராணிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.