பழனி பாண்டியன் நகர் பகுதியில் தலையில் கல்லை போட்டு பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள முட்புதரில் இருந்து சடலத்தை மீட்ட போலீசார், அது அப்பகுதியை சேர்ந்த காளீஸ்வரி (வயது 35) என்பதை முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர். தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொடூர கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.