ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி (70) என்பவர், கோவைக்கு அரசு பேருந்தில் சென்றபோது, அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்டதும், பின்னர் அந்தப் பெண் கொடுத்த தண்ணீரைக் குடித்ததும் மயக்கமடைந்துள்ளார். மயக்கமடைந்த நிலையில், லட்சுமியின் கழுத்தில் இருந்த 6.5 பவுன் தங்க நகையை அந்தப் பெண் பறித்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சென்றார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.