சென்னை மண்ணடி பகுதியில் வீட்டின் முன்பு நபர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலைவெறி தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாதீக், அப்துல்லா உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.