மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பயணிகள் நெரிசல் மிகுந்த மின்சார ரயிலிலிருந்து பெண் ஒருவர் நிலைதடுமாறிக் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலுக்குள் நிற்க இடமின்றி வாசலில் தொங்கியபடி பயணித்தபோது அவர் தண்டவாளம் அருகே தவறி விழுந்தார். நல்வாய்ப்பாக ரயில் நின்றுகொண்டிருந்த சமயத்தில் விழுந்ததால், அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் மும்பை மின்சார ரயில்களின் ஆபத்தான கூட்ட நெரிசலை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.