உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் வசிக்கும் ராம் சிங் என்பவர் தன்னுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்த பெண்ணைக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் சிங்கிற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்ட நிலையில் கீதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். மேலும் பிரீத்தி (35) என்ற பெண்ணுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்துள்ளார். அந்த பெண் அடிக்கடி பணம் கேட்டு டார்ச்சர் செய்ததால் எரித்துக் கொலை செய்துள்ளார்.