நெல்லையில் என்.ஜி.ஓ. காலனியில், காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு கிரேனை அலட்சியமாக ஓட்டிச் சென்றதால், சாலையோரம் நடந்து சென்ற செல்வி (54) என்ற பெண் உயிரிழந்தார். கடைக்குச் சென்று வீடு திரும்பியபோது கிரேன் வாகனம் அப்பெண் மீது மோதி, 15 அடி தூரத்திற்கு இழுத்துச் சென்றது. கிரேனை இயக்கிய நபர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.