பாதாள சாக்கடை குழியில் பைக்குடன் விழுந்த பெண் பத்திரமாக மீட்பு

4325பார்த்தது
கோவையில் பாதாள சாக்கடை குழியில் இருசக்கர வாகனத்துடன் பெண் ஒருவர் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக குழிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த மீட்புப் பணியாளர்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பெண்ணையும் இருசக்கர வாகனத்தையும் மீட்டனர். பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் இடங்களில் உரிய தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: News18

தொடர்புடைய செய்தி