பாடகி சின்மயியின் கணவரும், இயக்குநருமான ராகுல் ரவிச்சந்திரன், பெண்கள் தாலி அணிவது கட்டாயம் இல்லை என தெரிவித்துள்ளார். திருமணத்தின்போதே சின்மயியிடம், தாலி அணிவது உன்னுடைய விருப்பம் என்று தான் கூறியதாகவும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். ராகுல் ரவிச்சந்திரனின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. மேலும், ராகுல் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகை ரஷ்மிகா நடித்துள்ள 'The Girlfriend' திரைப்படம் வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.