தமிழகத்தில் நிலவும் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். டெல்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மாணவிகள் மிகவும் பாதுகாப்பாகவும், அவர்களின் பெற்றோர்கள் நிம்மதியாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடகிழக்கு மாநில மாணவிகளின் கல்விக்குத் தமிழ்நாடு ஒரு சிறந்த மற்றும் அமைதியான புகலிடமாகத் திகழ்வதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.