நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாக்கூர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு இன்னும் தரவுகள், தொகுதி வரையறைகள் செய்யவில்லை என மனுதாரர் தரப்பு கூற, எப்போது தொகுதி வரையறை செய்யப்பட உள்ளது என்று நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.