ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில், பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, நீச்சல் குளத்தில் மேலாடையின்றி இருந்த பெண் ஒருவர் வெளியேற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட சட்ட போராட்டத்தின் விளைவாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆண்களை போலவே பெண்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும் என கொண்டுவரப்பட்ட இந்த விதிமுறை, தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.