திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் இந்த திட்டத்தின் மூலம் தற்போது 1.31 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக இந்த தொகை வரவு வைக்கப்பட்டு வந்தது. மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சி அமைந்த நிலையில், விரைவில் முதலமைச்சர் விஜய் அறிவித்த ரூ.2,500 தொகை உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.