மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5000 வங்கிக்கணக்குகளில் வரவுவைக்கப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். மற்ற அரசியல் கட்சியினர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தை முடிந்துமாசி பிறந்துவிட்டது கூட்டணி யாருடன் என கேட்டதற்கு "பொறுமையாக இருங்கள்" என கூறிச்சென்றார்.