கேரளாவில் ஜூன் 15 முதல் கேஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம் எனப் புதிய முதல்வர் வி.டி.சதீசன் அறிவித்துள்ளார். மேலும், ஆஷா பணியாளர்களுக்கு ரூ.3,000, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.1,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், மூத்த குடிமக்களின் நலனுக்காகத் தனித் துறை உருவாக்கப்படும் என்றும் முதல்வராகப் பொறுப்பேற்றதும் அவர் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.