திருச்சியில் சிறுமி கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், “ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. சிங்கப்பெண் சிறப்பு படை உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்