தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால், 60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என முதலமைச்சர்
விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில், 60 வயதுக்கு மேல் இருந்தும் முதியோர் உதவித்தொகை பெறாத பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஏன் கிடைக்காது? என்ற கேள்வி மக்கள் இடையே எழுந்துள்ளது. மேலும் இதுகுறித்து மறுபரிசீலனை செய்யவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த, திட்டம் நடைமுறைக்கு வரும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.