மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களின் வங்கிக் கணக்கில் இன்று (பிப்.13) தமிழக அரசு ரூ.5,000 செலுத்தியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் வங்கிகளில் பெண்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். மேலும் பணம் எடுக்கும்போது சண்டையிட்டுக்கொள்ளும் சம்பவமும் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ரூ.5,000 திரும்பப் பெறப்படும் என்ற தவறான அச்சத்தால் அவசரமாக பணத்தை எடுத்துவருவதாக கூறப்படுகிறது. இந்த பணம் திரும்பபெறப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.