மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'திராவிட மாடல் 2.0' திட்டத்தின் கீழ் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போதுள்ள 1.31 கோடி பெண்களுடன், விடுபட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. உயர்மட்ட அரசு ஊழியர்களைத் தவிர்த்து, கடைநிலை ஊழியர்களின் குடும்பங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.