தவெக தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. முதலமைச்சர் விஜய் கால அவகாசம் தேவை என்றும் கேட்டிருந்தார். தற்போது, 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்படலாம். வடமாநிலத்தவர்கள், தகுதியற்றவர்கள், இறந்தவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு, மறுசீரமைக்கப்பட வாய்ப்புள்ளது. முன்னதாக திமுக அரசு வழங்கி வந்த ரூ.1,000 இப்போதும் வழங்கப்படுகிறது.