டிச., 15 முதல் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நேற்று (நவ., 15) நடைபெற்ற அரசு விழாவில் பேசிய அவர், அடுத்த மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார். அண்மையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பித்த விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கும் தொகை வழங்கப்படவுள்ளது.