உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சுமார் 28 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர். தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த முகாம்களில் விண்ணப்பிக்க வாய்ப்பு முடிந்துவிட்டதால், இனி நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. இனி தகுதியான பெண்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் குறைதீர்முகாம்களில் மனு அளிக்கலாம். அதிகாரிகள் பரிசீலித்து வாய்ப்பளித்தால் மட்டுமே ரூ.1000 பெற முடியும்.