நெருக்கடிகளை சமாளிக்கிற திறமை முதலமைச்சர் விஜய்க்கு உள்ளது என்று நிதியமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று (மே 17) செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, பொருளாதார நிலை என்பது படிப்படியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர இப்போது பதிலளிக்க முடியாது என கூறினார்.