மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைக்கும் பணிகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமைச்சர் மரிய வில்சன் கூறியிருந்த நிலையில், விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத பயனாளிகளைக் கண்டறிந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தவெக அறிவிப்பின்படி இனி 60 வயதுக்கு உட்பட்ட தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.