விமானத்திலும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதே திமுகவின் சாதனை என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்களுக்கு காரணமே பெரும்பாலான திமுகவினர்தான் என்பது முதலமைச்சருக்கு தெரியுமா? தெரியாதது போல நடிக்கிறாரா? என கேள்வியெழுப்பியுள்ளார்.