திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த முடியாத தலைவராக முதலமைச்சர் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் அவர் இன்று (நவ.22) இதுகுறித்து கூறியதாவது, “திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே பெண்ணை மிரட்டி திமுக ஒன்றியச் செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.