திருப்பூரில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி

4744பார்த்தது
திருப்பூரில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி பலி
திருப்பூர் மாவட்டம் புக்குளிபாளையம் பகுதியில் தனியார் பள்ளியின் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அருண்குமார் (23) என்பவர், எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி