ஹைதராபாத் நகர எல்லைக்குள் எஃகு மேம்பாலம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாதது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றுவது விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால், தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டுமான நிறுவனம் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.