உலகக்கோப்பை நாயகி ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசு

8307பார்த்தது
உலகக்கோப்பை நாயகி ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசு
மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில் இடம்பெற்றிருந்த ஆந்திராவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசரணி, இறுதிப்போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில், ஸ்ரீசரணி இன்று (நவ.7) ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார். அப்போது, ஸ்ரீசரணிக்கு 2.5 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு, கடப்பாவில் 1,000 சதுர அடி வீட்டுமனை மற்றும் குரூப் - 1 அளவிலான அரசுப்பணி வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி