உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா அணி அறிவிப்பு

2579பார்த்தது
உலகக் கோப்பை கால்பந்து: மெஸ்ஸி தலைமையில் அர்ஜென்டினா அணி அறிவிப்பு
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் ஜூன் 11 முதல் தொடங்கவுள்ள 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 26 பேர் கொண்ட அர்ஜென்டினா அணியை பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி அறிவித்துள்ளார். நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணிக்கு 38 வயதான நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மீண்டும் கேப்டனாக தலைமை தாங்குகிறார். 'ஜெ' பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, தனது முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 16 அன்று அல்ஜீரியாவை எதிர்கொள்கிறது.

தொடர்புடைய செய்தி