அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில்ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடக்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 48 அணிகள் 12 பிரிவுகளில் பங்கேற்கின்றன. அமெரிக்காவில் 11 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. நியூயார்க்கில் மட்டும் இறுதிச்சுற்று உட்பட 8 ஆட்டங்கள் நடக்கின்றன. இந்த நிலையில், நியூயார்க் மக்களுக்கு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகளை மலிவு விலையில் வழங்க உள்ளதாக நியூயார்க் மேயர் ஜோரான் மம்தானி அறிவித்துள்ளார்.