உணவுத் துறையில் உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்தும் நோக்கில், தலைநகர் டெல்லியில் நான்காம் ஆண்டு 'உலக உணவு இந்தியா' சர்வதேச கண்காட்சி நாளை (செப்.25) தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது. மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் சார்பில் பாரத மண்டபத்தில் நடைபெறும் இக்கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கவுள்ளார். ரஷ்ய துணை பிரதமர் திமித்ரி பாத்ரூஷெவ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.