சென்னையில் உலக கடல் உணவு மாநாடு

2977பார்த்தது
சென்னையில் உலக கடல் உணவு மாநாடு
உலக கடல் உணவு மாநாட்டை (WSC) முதன்முறையாக 2026-ம் ஆண்டு சென்னையில் நடத்த இந்தியா தயாராகி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த சர்வதேச கூட்டத்தில், மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு துறையின் உலகளாவிய நிபுணர்கள் பங்கேற்று நீடித்த கடல் உணவு வர்த்தகம் மற்றும் மீன்பிடி தொழில்நுட்பம் குறித்து விவாதிக்க உள்ளனர். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் நிதி ஆயோக் ஆதரவுடன், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இம்மாநாட்டை ஒருங்கிணைக்கின்றன.