சென்னை ஆவடி அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த எப்ரின் (38) - வனிதா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். வனிதா நேற்று (ஜூலை 25) மாலை தனது மகள்களுடன் பரித்திப்பட்டில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு சென்று சிக்கன் பர்கர் வாங்கியுள்ளார். அதில், புழுக்கள் இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஊழியர்களிடம் கேட்டதற்கு சரியான பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.