வுஷூ வீரர்களான இரட்டையர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்பு

2690பார்த்தது
வுஷூ வீரர்களான இரட்டையர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்பு
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்களான நிகில் ஸ்ரீராம் மற்றும் நிக்ஷிதா, சர்வதேச வுஷூ போட்டிகளில் பதக்கங்கள் வென்றதன் மூலம் விளையாட்டுப் பிரிவில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். சிறுவயது முதலே ஒரே வகுப்பறையில், ஒரே பாடப்பிரிவில் படித்த இவர்கள், விளையாட்டிலும் சிறந்து விளங்கி, தற்போது மருத்துவத் துறையில் தங்கள் கனவை நிறைவேற்ற முயற்சித்துள்ளனர். குடும்பத்தில் பலர் மருத்துவத் துறையில் இருப்பதால் தாங்களும் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்ததாக இரட்டையர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி