யமஹா நிறுவனம் முற்றிலும் புதிய FZ-Rave பைக்குடன் XSR 155 மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய XSR155 மாடலின் விலை ரூ.1,49,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யமஹாவின் நவீன-ரெட்ரோ மாடல்கள் பிரிவில் மிகவும் சிறிய மாடலாக XSR155 என்ற மாடல் இணைந்துள்ளது. இந்த பைக் MT-15 மாடலுடன் கிளாசிக் தோற்றத்தை இணைத்தது போன்ற பிம்பம் கொண்டுள்ளது. மேலும், வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், டியர் டிராப் டேன்க், எல்சிடி கன்சோல் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.