தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (நவ.08) கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறி மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.