தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் பக்தர்கள் வேதனையில் உள்ளனர். மேலும், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.