தமிழகத்தில் வருகிற பிப்.21, 22 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பிப்.21, 22ஆகிய தேதிகளில் 7-11 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அன்றைய தினம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (பிப்.19) உருவாக வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.