புறநகர் மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட யுடிஎஸ் (UTS) மொபைல் செயலி வரும் மார்ச் 1 முதல் முழுமையாக நிறுத்தப்பட உள்ளது. இதற்கு மாற்றாக ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘ரயில் ஒன்’ (RailOne) என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய செயலி மூலம் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3% கட்டணச் சலுகை வழங்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.