கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதே இடத்திற்கு வந்து வாக்கு கேட்டபோது வெற்றி பெற வைப்போம் என்று கூறிவிட்டு இறுதியில் பெரிய அல்வா கொடுத்துவிட்டீர்கள் என வாக்காளர்களிடம் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி
ஸ்டாலின் நகைச்சுவையாக தெரிவித்தார். தாராபுரத்தில் இன்று (அக்.3) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர்,
திமுக வேட்பாளர் சுகன்யா தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறாமல் கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பவர் என்றும், அவரை வெற்றி பெற செய்தால் மக்களில் ஒருவராக சேவை செய்வார் என்றும் உறுதியளித்தார்.