சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவியியை மிரட்டி, இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லிபின் ராஜ் (25) என்ற இளைஞர், சுமார் 4 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுடன் ஆன்லைனில் அறிமுகமானார். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், வீடியோ கால் மூலம் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை எடுத்துள்ளார். அதை காட்டி மிரட்டி பல முறை பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.