இளம்பெண் தலையில் கல்லால் கொடூரமாக தாக்கிய வாலிபர்

0பார்த்தது
இளம்பெண் தலையில் கல்லால் கொடூரமாக தாக்கிய வாலிபர்
திருச்சியில் அமலா வெர்ஜினா என்ற பெண்ணை, அவரது காதலன் நவீன் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேஸ் கோர்ஸ் சாலை பூங்காவில் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த நவீன் துப்பட்டாவால் அமலாவின் கழுத்தை நெரித்து, கல்லால் முகத்தில் தாக்கியுள்ளார். பொதுமக்களால் பிடிபட்ட நவீனைப் போலீஸார் கைது செய்தனர். படுகாயமடைந்த அமலா தற்போது ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி