கார் தீப்பிடித்து இளைஞர் உடல் கருகி பலி

22பார்த்தது
கோவை மதுக்கரை அருகே நேற்றிரவு (ஜன., 07) கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் இளைஞர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். காரில் 3 பேர் பயணித்த நிலையில், விபத்து ஏற்பட்ட போது விமல் (22) என்பவர் மட்டும் காருக்குள் சிக்கினார். மற்ற இருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். சாலையோரத்தில் அமைக்கப்பட்ட பைப்பில் கார் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.