காதலி கண்முன்னே இளைஞர் கொலை.. பதைபதைக்க வைக்கும் வீடியோ

1542பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே காதலி கண்ணெதிரே காதலன் குத்திக் கொல்லப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சய்(19) என்ற இளைஞரை பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்கள் கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில் தந்தை குமார், மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலையாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.    நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி