சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, 16 வயது சிறுமி குளிப்பதை இளைஞர் ஒருவர் எட்டிப்பார்த்துள்ளார். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அந்த இளைஞரை தட்டிக்கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த இளைஞர், பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பெற்றொர் அளித்த புகாரின்பேரில் இளைஞர் மற்றும் அவரது சித்தப்பா ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.