கன்னட சின்னத்திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்த பிரபல இளம் நடிகை ராஷ்மி லீலா (37), நுரையீரல் பாதிப்பு காரணமாக நேற்று (பிப்.16) காலமானார். கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'பாப்பா பண்டு', 'பந்தவ்யா' போன்ற புகழ்பெற்ற மெகா தொடர்களில் தனது எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த அவருக்கு, ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.