கடலூர் மாவட்டம் வடலூர் அருகே இளம்பெண் முகம் சிதைந்த நிலையில், கழுத்து அறுக்கப்பட்டு 2 நாட்களுக்கு முன் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், சம்பத் என்பவர் மஞ்சுளாவை கள்ளக்காதல் காரணமாக திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். கற்பழிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மஞ்சுளா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், ஆத்திரத்தில் கத்தியால், மஞ்சுளாவை கழுத்தை அறுத்து கொன்றதாகவும் கூறியுள்ளார்.